சின்னத்திரையின் பிரபலமான நடிகரான சஞ்சீவ் கார்த்திக், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்படும் சஞ்சீவ் கார்த்திக் தற்போது இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

“1 மில்லியனுக்கு நன்றி. நான் தற்போது பிரைம் டைமில் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறேன். அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன். லவ் யூ ஆல்” என்று தன் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார்.

 

[youtube-feed feed=1]