கீவ்: கடந்த இரு நாட்களில் 1லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது போர்குற்றம் என்று கடுமையாக சாடியுள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் 16-வது நாளாக தொடர்கிறது. இடையில், உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில் உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இடையிடையே போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இதனால் ஏராளமான வெளிநாட்டினர் மட்டுமின்றி உக்ரைன் மக்களும் நாட்டை விட்டு வெளியேறினர். உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா சமீபத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த இரு நாட்களில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் சமயங்களில், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள கீவ் புறநகர்ப் பகுதிகள் உட்பட ஏழு நகரங்களில் இருந்து சுமார் 1 லட்சம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மரியுபோலில் உள்ள குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை மீது புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலை “போர்க்குற்றம்” என்று கடுமையாக சாடியதுடன், இது ரஷ்யாவின் இனப்படுகொலை என்றும் குற்றம் சாட்டினார்.
மரியுபோல் நகரில் உள்ள ஒரு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்கிய ரஷ்யா விமானத் தாக்குதல் நடத்தியதாக கூறியவர் இதில், 17 பேர் காயமடைந்துள்ளனர். இது என்ன வகையான செயல், “மகப்பேறு மருத்துவமனையில் யாராவது ரஷ்ய மொழி பேசுபவர்களை துஷ்பிரயோகம் செய்தார்களா? அது என்ன? மருத்துவமனையின் ‘டெனாசிஃபிகேஷன்’ ஆகுமா?” என்று கூறியதுன், இது ஏற்கனவே செய்து வரும் அட்டூழியங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறியதுடன், இது போர்குற்றம், மகப்பேறு மருத்துவமனை மீதான தாக்குதலாது உக்ரேனியர்களின் இனப்படுகொலை செய்வதாகும் என்று குற்றம் சாட்டியதுடன், ரஷ்யாவின் இந்த போர்க்குற்றத்தை கண்டிப்பதில் நாம் ஒன்றுபட வேண்டும் என்று உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.