சென்னை: சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் ஒரே நாளில் சென்னையில் நடைபெற்ற ‘லோக் அதாலத்’தில் 1.12 லட்சம் வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டதுடன், அதன்மூலம் ரூ.632 கோடி நிவாரணம் கிடைத்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் ஜுன் 14ந்தேதி நடைபெற்ற ‘லோக் அதாலத், நிகழ்ச்சியல், ஒரே நாளில் 667 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட துடன், வழக்குகள் தொடர்பாக ரூ.1,18,92,316 பணம் வசூலிக்கப்பட்டு மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜூன் 14 அன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏறக்குறைய 1.12 லட்சம் வழக்குகளுக்கு ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ரூ.632 கோடி நிவாரணம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் செயல்படும் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, மக்கள் நீதிமன்றங்கள் மூலம் விபத்து, நஷ்ட ஈடு தொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில், ஆண்டுதோறும் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. அன்றைய நாளில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெறும் விசாரணையில் மனுதாரர் களும், எதிர்மனுதாரர்களும் விருப்ப அடிப்படையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்குகள் தள்ளுபடி மற்றும் பைசல் செய்யப்பட்டும்.
இந்த வழக்குகளில் பெரும்பாலானவை காசோலை மோசடி, கடன் பத்திரங்கள், மண முறிவு, நிலப் பிரச்னை தொடர்பான வழக்குகளாக இருந்தன.
“சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், மூன்று அமர்வுகள் அமைக்கப்பட்டன. வழக்குகள் தொடர்பாக இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளையும் உடனுக்குடன் அறிவித்தனர்,” என்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.