சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 100 சதவிகிதம் உயர்த்தி அறிவித்தார்.
இது எம்எல்ஏக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் காரணமாக மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்எல்ஏக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஏற்புடையதல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க அதை விடுத்து ஊதிய உயர்வை முதல்வர் அறிவித்துள்ளதை ஏற்கவில்லை என்றும், இதுகுறித்து பேசிய திமுக எம்.எல்.ஏ அன்பழகன், அதிமுக எம்எல்ஏக்களை தக்க வைக்கவே சம்பள உயர்வு அறிவிக்கப்படுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது உள்ள நிதி நெருக்கடியில் சம்பள உயர்வு தேவையா என்று எம்.எல்.ஏ அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.