டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,930 ஆக அதிகரித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று பாதிப்பு  16,159 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,930 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 4.32 சதவிகிதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கடந்த  24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  புதிதாக  மேலும், 18,930 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,35,53,653-ஆக அதிகரித்துள்ளது. நேற்று தொற்று பாதிப்பு 16,159 ஆக இருந்த நிலையில் சற்று அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,457 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது.

நேற்று 35 பேர்  சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.  இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,25,305 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து நேற்று 14,650 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,29,21,977-ஆக அதிகரித்துள்ளது என்று குணமடைந்தோர் விகிதம் 98.53 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,98,33,18,772 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 11,44,498 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.