டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 12 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்து காணப்படுகிறது. தற்போது வேகமாக குறைந்து 2500 வரை உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. தினசரி நேர்மறை விகிதம் 2.07% ஆக உள்ளது. வாராந்திர நேர்மறை விகிதம் தற்போது 1.38%.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,529 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,04,463 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,745 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24மணி நேரத்தில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,43,436 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும்ட 32,282 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 89.62 கோடிக்கும் அதிகமான கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஒட்டுமொத்த #COVID19 தடுப்பூசி கவரேஜ் 218.84 கோடியை (2,18,84,20,182) தாண்டியுள்ளது. 12-14 வயதிற்குட்பட்டவர்களுக்கு 4.10 கோடிக்கு மேல் முதல் டோஸ் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன.