சென்னை: தமிழகத்தில்  நேற்று  1,957 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 189 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்

தமிழகத்தில்   இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,63,544 பேர் ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனாவிலிருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை  25,09,029 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்  இதுவரை 3,77,50,115 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 20,5385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,  இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை  5,38,521 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரோனா உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலையில், நேற்று 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதன்மூலம் இதுவரை கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை  8,321 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  132 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,28,465 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

02.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 32,07,843 பேருக்கும், 02.08.2021 அன்று 25,819 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: