டெல்லி: இந்தியாவில் சற்று அதிகரித்து வந்த கொரோனா தொற்று மீண்டும் குறையத்தொடங்கி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 16,464 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, நேற்று மேலும் புதிதாக 16,464 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,36,275 ஆக உயர்ந்தது.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 39 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,396 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 16,112 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,33,65,890ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.48% ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 1,43,989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 2,04,34,03,676 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 8,34,167 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.