சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 15ந்தேதி மாலை முதல் 18ந்தேதி மாலை வரையிலான கடந்த 4 நாட்களில் ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 15ந்தேதி மாலை முதல் அமலுக்கு வந்துள்ள நலையில்,  மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரிவித்தார்.


மதுரை மாவட்டம், திருமங்கலம் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படை அலுவலர்கள் பணியை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப் பதிவும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், அரசியல் கட்சியினர்  ஆவணங்கள் இல்லாமல்  குறிப்பிட்ட அளவுக்கு மேலே பணம் பொருட்கள் எடுத்துசசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர வாக்களிப்பதற்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர் மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தற்போது 234 தொகு​தி​களி​லும், தொகு​திக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்​காணிப்​புக் குழுக்​கள் என்ற விகிதத்​தில், தமிழகம் முழு​வதும் 2,160 பறக்​கும் படைகள், 2,160 நிலைக் கண்​காணிப்​புக் குழுக்​கள் தீவிர கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்  தெரிவித்தார். மார்ச் 18-ம் தேதி நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழு​வதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]