ஹத்ராஸ்: ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க காங்கிரஸ் உறுதியாக போராடும் என்றும் கூறினார்.
கடந்த ஜூலை 2ந்தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலே பாபா ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் வெளி யேறியபோது, போலே பாபாவின் காலை தொட்டு வணங்க கூட்டத்தினர் முண்டியடித்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடா்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்கிய சிக்கந்தர ராவ் காவல் துறையினா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனா். இதனிடையே, போலே பாபாவின் ஆசிரமத்துக்குள் புதன்கிழமை இரவு நுழைந்த காவல் துறையினா், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை நடத்தினா். விசாரணைக்காக இன்றி சோதனைக்காகவே ஆசிரமத்துக்குள் சென்றதாகவும், அதேசமயம், ஆசிரமத்தில் போலே பாபா இல்லை எனவும் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மைன்புரி சுனில் குமார், ஹத்ராஸ் நகர காவல் கண்காணிப்பாளர் ராகுல் மிதாஸ் ஆகியோர் தெரிவித்தனா்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின்னணியில் சதி உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் எனவும், சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார். சம்பவம் குறித்த விரிவான தன்மையையும், விசாரணையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் மூன்று பேர் கொண்ட நீதி விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு குழு விசாரணை நடத்தி அடுத்த இரண்டு மாதங்களில் அதன் அறிக்கையை மாநில அரசிடம் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து மாநில அரசு மற்றும் மத்தியஅரசு சார்பில் நிதிஉதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், உ.பி. மாநில ரேபரேலி தொகுதி எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், தனது ஆதரவாளர்களுடன் ஹத்ராத் வருகை தந்து, பாதிக்கப்பட்வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரிந்தோரின் குடும்பங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை காலை தில்லியில் இருந்து சாலை வழியாக புல்ராய் கிராமத்திற்கு வருகை தந்தவர் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த்தபோது, இந்த சோக சம்பவம் எப்படி நடந்தது என்று கேட்டறிந்த ராகுல், இது ஒரு சோகமான சம்பவம். நெரிசலில் சிக்கி பலர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். அவர்கள் என்னிடம் போலீஸ் ஏற்பாடு போதவில்லை என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர், அவர்களின் நிலைமையை நான் புரிந்து கொள்ள விரும்பினேன்.
இந்த சம்பவத்தை நான் அரசியலாக்க விரும்ப வில்லை. ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் குறைபாடுகள் உள்ளன, முக்கியமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உ.பி., முதல்வரை மனம் திறந்து கேட்டுக்கொள்கிறேன். இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது யாருக்கும் பயனளிக்காது.
மேலும், காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க காங்கிரஸ் உறுதியாக போராடும் என்றும் கூறினார்.