
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பொது இடத்தில் வக்கீல்களை அவமரியாதையாக பேசி உள்ளார். இதற்கு தி.மு.க. வக்கீல் அணி சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். அதனை பதிவு செய்வதற்காகவே அவரது கொடும்பாவியை எரிக்கிறோம் என்று நாகர்கோவில் கோர்ட் முன்பு இன்று மதியம் 1.30 மணிக்கு தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். திடீரென அவர்கள் வைகோவின் உருவப்பொம்மையுடன் சாலையில் நின்று கோஷம் போட்டனர். பின்னர் அந்த உருவப்பொம்மையை தீவைத்து எரித்தனர்.
Patrikai.com official YouTube Channel