
தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக 500 கோடி பேரம் நடத்தியதாக வைகோ கூறியதால், திமுக நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ’’திமுக சார்பில் நேற்று இரவு எனக்கு தாக்கீது கொடுக்கப்பட்டிருக்கிறது. கூறிய வார்த்தையை திரும்பப் பெறவில்லை எனில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. என் மீது வழக்குத் தொடர்ந்ததற்கு மகிழ்ச்சி. திமுகவின் சட்டப்பூர்வமான நடவடிக்கையை நான் சட்டப்பூர்வமாக சந்திப்பேன்’’ என்று வைகோ சொன்னதோடு அல்லாமல்,
’’2ஜி ஸ்பெக்ட்ரம் பின்னணியில் இருந்தது திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் . வேண்டுமானால் இதற்காக என் மீது வழக்குப் போடட்டும். அதை சந்திக்கத் தயாராக உள்ளேன்’’என்று கூறினார்.
இதையடுத்து, ஸ்டாலின் இன்று வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel