ஓம்! சரவண பவ!
நமக்கு முருகன் பழத்திற்காக சண்டையிட்டு பழனி மலை சென்றது தெரியும். ஆனால் அதற்கு பிறகு நடந்த கதை எவ்வளவு பேருக்கு தெரியும்? இதோ! மேலே படியுங்கள்.
குமரன் கோபத்தை தனித்து அவரை கைலாயம் அழைத்து சென்றனர். நம் வேலன் வரவிற்காக அனைத்து கடவுள்களும், தேவர்களும் காத்து கொண்டு இருந்தனர். அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. யாவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர் ஒருவரை தவிர…. ஆம்! இந்த கலகத்திற்கு காரணமாக இருந்த நாரதர் தான் அவர்.
கண் முன்னே அறுவை உணவு …ஆனால் அவருக்கு பசியே இல்லை. .. காரணம் புரியவில்லை. .. நாராயணனை நோக்கி ஓடினார்.
திருமால் அவருக்கு விளக்கினார்.
‘நாரதா! இது முருகனின் கோபத்தால் தான். உன் கலகம் நன்மையில் முடிந்தாலும் ஒரு பாலகன் பழம் கிடைக்காமல் ஏமாந்து னால் பழம் உண்ண முடியாமல் போனதோ அதே போல் உன்னாலும் உண்ண முடியாமல் போனது. இது தொடரும்’ என்றார்.
பயந்து போன நாரதர் ‘இதற்கு தீர்வே கிடையாதா? ‘ என்று வினவினார்.
நாரதா! நீ முருகனுக்கு மீண்டும் ஒரு அரிய கனியை தேடி கொடு. அவர் அதை சாப்பிட்டால் உன் சாபம் தீரும் என்றார்.
நாரதரும் தேடி அலைந்து ஒரு கனியை கொண்டு வந்து வேலவனிடம் கொடுத்தார்.
நாரதரின் நிலையை உணர்ந்த முருகன் அந்த பழத்தை உண்டார். நாரதரின் சாபம் நீங்கியது.
நாரதர் வேலனை வணங்கினார்.
ஐயனே! என் சாபம் தீர நீங்கள் இந்த கனியை உண்ட தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினார். அருகில் இருந்த அகத்தியர் நாரதரிடம் கூறினார். நாரதா! நீ தந்த கனியை வேலன் உண்ட தினம் இன்று முதல் ‘வேலன் டைன்ஸ்’ தினம் என்று அழைக்கப்படும் என்று.
அது தான் நாம் கொண்டாடும் ‘வேலன்டைன்ஸ் டே’,
-படித்ததில் பிடித்தது