ஸ்டாக்ஹோம்:
இந்தாண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசுமுன்று விஞ்ஞானிகளுக்கு, பகிர்ந்து அளிக்கப்படுவதாக சுவீடனின் நோபல் அறக்கட்டளை நிறுவனமான ‘ராயல் சுவீடிஷ் அகாடமி’
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த தாமஸ் லின்டால், அமெரிக்காவின் பால் மோட்ரிச், துருக்கி -அமெரிக்கரான அஜீஸ் சன்கர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
காய்ச்சல், முதுமை போன்றவற்றுக்கு காரணமான மரபணு குறைபாடுகளை, உடலில் உள்ள செல்கள், தாமாகவே எப்படி சரி செய்கின்றன என்பதை இந்த விஞ்ஞானிகள்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் ஏராளமான பரம்பரை நோய்கள் மற்றும் முதுமை போன்றவற்றுக்கான காரணங்களை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு, பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவையான சிகிச்சை முறைகளின் வளர்ச்சிக்கும் அடித்தளம் இட்டுள்ளது.
மரபணு செல்களில் ‘டியாக்சிரிபோநியூக்ளிக்’ என்ற அமிலம் இருக்கிறது. உயிர்களின் உருவாக்கத்திற்கும் நீடித்த ஆயுளுக்கும் இந்த அமிலம் மிகவும் அவசியம். .மரபணு செல்கள் ஒன்று, இரண்டாகவும், இரண்டு நான்காகவும் பல்கிப் பெருகும்போது இந்த அமிலம் ஒவ்வொரு செல்லிலும் இடம் பெற வேண்டும். அதற்கேற்ப மூலக்கூறு செல்கள் இந்த அமிலத்தை உருவாக்குகின்றன. .
அப்படி உருவாகாவிட்டால் அமிலம் இல்லாத செல்கள் அழியும் அல்லது தவறான பரிமாணத்தை அடையும். இந்த குறைபாடுதான் புற்றுநோய், முதுமை போன்றவற்றுக்கு ஒரு காரணம்.
. இந்த செயல்பாடுகளைத் தான் மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே இவர்களுக்கு இந்த ஆண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.”
- இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.