UAE சிறைச்சாலைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற இந்தியர்கள் சுமார் 1200 பேர் உள்ளனர்.
2013ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையே ஏற்பட்ட தண்டனைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி UAE சிறையிலிருக்கும் இந்தியர்கள் விருப்பப்பட்டால் அவர்களின் மீதி தண்டனை காலத்தை இந்திய சிறைச்சாலைகளில் கழிக்க முடியும்.
ஆனால் இங்கு சிறையில் இருப்பவர்களில் 10% பேர் மட்டுமே இந்திய சிறைகளுக்கு மாறிப்போக விரும்புவதாகவும், மற்றவர்கள் இங்குள்ள சிறைகளில் கிடைக்கும் அடிப்படை வசதிகள், நல்ல உணவு மற்றும் பாதுகாப்பான சூழலை கருத்தில் கொண்டு இங்கேயே சிறைச்சாலைகளில் இருக்க விரும்புவதாகவும், இந்திய சிறைச்சாலைகளுக்கு போக விரும்பவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் யு.ஏ.இக்கான இந்திய தூதர் சீதாராமன்.
‘மேக் இன் இந்தியா’ என டிசைன் டிசைனா நம்மாளு கூவினாலும் ஜெயில் கைதிக்கூட இந்திய ஜெயிலுக்கு வர பயப்படுறான் பக்தர்களே!
நம்பிக்கை ராஜ் (முகநூல் பதிவு)