tnec
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் காணொலிக்காட்சி(வீடியோ கான்பரன்ஸ்) நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் கூறியிருப்பதாவது:-
’’இயற்கை பேரிடரின்போது சூழ்நிலையை கணிக்க-கண்காணிக்க குறிப்பிட்ட வேண்டுகோளின்படி காணொலி காட்சியை அனுமதிக்க மறுபரிசீலனை செய்யப்படும். குறிப்பிடத்தக்க அளவுகோல்-அளவிற்கு மேல் பேரிடர் ஏற்பட்டவுடன் காணொலி காட்சி அவசியம் என்று கருதப்பட்டால் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தொடர்புடைய அலுவலர்களுடன் காணொலிக் காட்சியை தொடர்புடைய முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர் நடத்தலாம் என்று ஆணையம் முடிவு செய்துள்ளது.
காணொலிக் காட்சியை நடத்துவதற்கு முன்பு தொடர்புடைய துறை மாநில தலைமை தேர்தல் அலுவலரை அணுகி தலைமை தேர்தல் அலுவலரின் அனுமதியை பெற வேண்டும். அடுத்து வரும் காணொலிக் காட்சிக்கும் ஆணையத்திடமிருந்தும் அனுமதி பெறப்பட வேண்டும்.
இயற்கை பேரிடருக்கான நிவாரணத்திற்கு பொறுப்பேற்று கொண்ட அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட குற்றவியல் நீதிபதி மற்றும் அலுவலர்கள் மட்டுமே காணொலிக் காட்சியை கவனிக்க அழைக்கப்படுவார். பேரிடரின் மீட்பு நிவாரணம் தவிர யாதொரு பிரச்சினையும் காணொலிக் காட்சியில் படக்கூடாது.
காணொலிக் காட்சிக்கு முன்போ அல்லது பின்போ யாதொரு செய்தி விளம்பரம் காணொலிக் காட்சியில் வழங்கப்படக்கூடாது. காணொலிக் காட்சியின் செயல்முறைகளுக்கான ஆடியோ, வீடியோ பதிவுகள் தொடர்புடைய துறையால் பராமரிக்கப்பட வேண்டும். மற்றும் தலைமை தேர்தல் அலுவலருக்கு அதன் நகல் அளிக்கப்பட வேண்டும்.
காணொலிக் காட்சியின் மூலமாக வாக்காளர்களுக்கு உறுதி வழங்குமாறு அமையும் அறிவிப்புகள், நிதிக்கான அறிவிப்புகள் அல்லது வாக்குறுதி பணம் அல்லது இனத்திற்கான உதவிகள் மற்றும் அரசியல் வகைக்கான அறிக்கைகள் போன்றவை வழங்கப்பட மாட்டாது.
காணொலிக் காட்சியின் போது தலைமை தேர்தல் அலுவலரின் பிரதிநிதி இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட விலக்களிப்பு குறிப்பிட்ட அளவு கோல்-அளவு பேரிடருக்கு பின் உடனடியாக மட்டுமே செயல்படுத்தப்படும். காணொலிக் காட்சியை தடை செய்வது அமைச்சர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் அலுவலர்களால் மாதிரி நடத்தை விதிகளை செயல்படுத்தும்போது பொது விதியாக தொடரப்படலாம்.
இந்த உத்தரவுகள் மாநில அரசு மற்றும் மாநிலத்தின் அனைத்து தேர்தல் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.’