தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்துடன் தி.மு.க.நடத்திய பேச்சு வார்த்தை முறிந்து போய் விட்டது.
சும்மா இருந்த ஸ்டாலினை ,விஜயகாந்துடன் பேசுமாறு தூண்டி விட்டவர் –திருநாவுக்கரசர். கேப்டன் உடல் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்குப்போன அரசர் -அரசியல் பற்றியும் பேசினார்.
வெளியே வந்த அரசர்- ஸ்டாலினை செல்லில் தொடர்பு கொண்டு ‘’கேப்டனுடன் பேசுங்கள்.. தி.மு.க.கூட்டணிக்கு வர அவர் தயாராக இருக்கிறார்’’ என சொல்ல-
ஸ்டாலினும் மறுநாள் விஜயகாந்தை சந்தித்தார். அரசியல் பேசவில்லை என அவர் சொல்ல- பிரேமலதாவோ.’’அரசியல் பேசினோம்’’ என்றார்.
தே.மு.தி.க.வை தன் பக்கம் இழுக்க 2016 ஆம் ஆண்டிலேயே கருணாநிதி பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். வெற்றி பெறவில்லை.
இரண்டாம் முறையாக ஸ்டாலினும் ,விஜயகாந்திடம் தோற்றுப்போனார்.
என்ன நடந்தது?
‘6 லோக்சபா –ஒரு ராஜ்யசபா + கரன்சி என்பது ‘ கேப்டன் நிபந்தனை. தொகுதிகள் ஓ.கே.பணம் கிடையாது என்பது ஸ்டாலின் நிலைப்பாடு. மக்களவை தேர்தல் ஒரு புறம் இருக்க — 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் விஜயகாந்த் ஓட்டுகள் பலன் தரும் என்பது அவர் எண்ணம்
இதனை தி.மு.க.வில் ஒரு தரப்பு ஏற்க வில்லை.
‘விஜயகாந்தால் பிரச்சாரம் செய்ய வர முடியாது. கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்தவரிடம் இவ்வளவு தூரம் இறங்கி போக தேவை இல்லை’’ என்பது –தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்தாக இருந்தது.
இதனை ஏற்றுக்கொண்டார்-ஸ்டாலின். அதன் பிறகே தே.மு.தி.க.வுக்கு கதவை மூடியுள்ளார்.
தி.மு.க.விடம் விஜயகாந்த் விதித்த அதே நிபந்தனைகளை அ.தி.மு.க.ஏற்றுக்கொண்டது. கூட் டணி உறுதியாகி விட்டது.
6 லோக்சபா + ஒரு ராஜ்யசபா + கரன்சி கேப்டனுக்கு கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளது.
சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும் –சில இடங்களை கேட்டுள்ளார் விஜயகாந்த். ஆனால் அ.தி.மு.க. திட்டவட்டமாக மறுத்து விட்டது.
விஜயகாந்த் முடிவால் –சந்தோசமாக இருப்பது- தி.மு.க.கூட்டணி கட்சிகள் தான். தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்து விடும் என்பதே காரணம்.
-பாப்பாங்குளம் பாரதி