வெள்ளத்தில மூழ்கிப்போன கார்களை அந்தந்த தயாரிப்பு நிறுவன சர்வீஸ் சென்டர்ல விட்டா வண்டி வாங்கின விலைக்கு மேல எஸ்டிமேட் போட்டுத் தர்றாங்க. என்னென்னு கேட்டா ஹெட் லைட்ல ஆரம்பிச்சு எலக்ட்ரானிக், எலக்ட்ரிக் பொருட்கள், கேபிள்கள் எல்லாத்தையும் புதுசா மாத்திக் கொடுப் போம்கிறாங்க. வண்டிய விட்டுட்டுப்போங்க. ரெடி பண்ண 3 மாசம் ஆகும். போன் பண்ணப்புறம்வாங்கன்னு சொல்றாங்க..
சரி நம்ம வண்டிக்குதான் இன்ஷ்யூரன்ஸ் இருக்கே க்ளைய்ம் பண்ணிக்கலாம்னு போனா இந்த எஸ்டிமேட்ட அவன் பாத்துட்டு சார் ஐடிவி (Insured’s declared value) வேல்யூவை விட ரிப்பேர் செலவு அதிகமா வருது. ஒண்ணு பண்ணலாம். இப்ப இருக்கிற ஐடிவி வேல்யூல ஒரு 90% நாங்க பணம் கொடுத்திடறோம். நீங்க வேற வண்டிவாங்கிக்கோங்கன்னு சொல்றாங்க. சரி இந்த வண்டிய என்ன பண்றதுன்னு கேட்டா அது வாங்கற துக்கு ஏஜென்ட்டுங்க இருக்காங்க. அவங்க வந்து வேல்யூ போட்டுக் கொடுப்பாங்கன்னு சொல்றாங்க. மூனுபேருமா சேர்ந்து வாடிக்கையாளர்களை ப்ரெய்ன் வாஷ் பண்றாங்க.
சரி வரச்சொல்லுங்கன்னு சொன்னா அவங்க வந்து அது புது காரா இருந்தாலும் அநியாயத்துக்கு 75ஆயிரத்தி லேந்து அதிகபட்சமா 2 இலட்சம் வரை ஆஃபர் பண்றாங்க. இதுல இன்னொரு கொடுமை என்னென்னா அந்த பணத்தை கூட வண்டி உரிமையாளருக்கு கொடுக்க மாட்டாங்களாம். அத அந்த 90 சதவீதம் கொடுக்கிற அமெளன்ட்ல கழிச்சிகிட்டு மீதிய ஒரு வேளை வங்கியில கார் வாங்கினதுக்கு கடன் வாங்கியிருந்தா அந்த செக்கை அங்க அனுப்பிடுவாங்களாம்.. அப்போ நான் போட்ட முதலீடுன்னு கேட்டா அதுக்கு நாங்க என்ன சார் பண்ணமுடியும்னு கைய விரிச்சிடறாங்க..இனிஷியல் பேமன்ட் போய் மாசாமாசம் இன்ஸ்டால்மென்ட் கட்னதும் போயிடும்.
மொத்தமா வாகனம் விக்கிற நிறுவனங்கள், இன்ஷ் யூரன்ஸ் நிறுவனங்கள், செகன்ட்ஹேன்ட் வண்டி வாங்கற புரோக்கர்கள் சேர்ந்து சென்னையில இப்போ கூட்டுக்கொள்ளை அடிச்சுகிட்டு இருக்காங்க..
ஒரு நண்பர் மூழ்கிப்போன தன்னோட வண்டிய அத தயாரிச்ச சர்வீஸ் சென்டர்ல விட்டு ரிப்பேருக்கான எஸ்டிமேட் கேட்டாரு. எஸ்டிமேட் போட்டுக்கொடுக்க 5 ஆயிரம் வாங்கிகிடடு 1இலட்சத்து 30ஆயிரம் ரூபாய் ஆகும்னு சொல்லியிருக்காங்க. வேணாம்னு சொல் லிட்டு அவரு வீட்டு பக்கத்துல இருக்கிற தனியார் கேரேஜ்ல வண்டிய விட்டு மெக்கானிக் கேட்ட ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கிக் கொடுத்து வண்டிய வெறும் 18 ஆயிரத்துக்கு ரெடி பண்ணியிருக்காரு..
ஏகப்பட்டவங்க தங்களோட கார்களை தயாரிப்பு கம்பெனி களோட சர்வீஸ் ஸ்டேஷன்ல விட்டுட்டு அவங்க சர்வீசுக்கு ஆகற செலவு எஸ்டிமேட்டை பாத்துட்டு என்ன செய்வதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்காங்க..எரியற வீட்ல பிடுங்கற வரை லாபம்னு இப்படி இந்த மூனுபேரும் சேர்ந்து கூட்டுக்கொள்ளை அடிக்கிறாங்க.
வெள்ளத்தில மூழ்கிப்போன கார சர்வீஸ் சென்டர்ல விட்டா ரிப்பேர் பண்றதுக்கு இன்ஷ்யூரன்ஸ் கவர் ஆகி அதுக்குள்ள செலவு முடிஞ்சு போகுதான்னு பாருங்க. இல்லேன்னா சர்வீஸ் சென்டர்ல ஏகத்துக்கும் செலவு எஸ்டிமேட் கொடுத்தா வண்டிய வெளியில எடுத்துக் கிட்டு வந்து வேற தனியார் நடத்தற கேரேஜ்ல விடுங்க.. நிறுவனங்கள் கொடுக்கிற எஸ்டிமேட், ஒண்ணும் பண்ணமுடியாது வித்துடுங்கன்னு சொன்னா நம்பாதீங்க. அப்படி நம்பனீங்கன்னா காரும் போயிடும். கட்ன இனிஷியல் பணமும் போய் கட்டவேண்டிய லோன் தொகைக்கும் நோட்டீஸ் வரும்..
எனவே கார் வேல்யூவை விட அதிகமா ரிப்பேர் செலவு ஆகும்னு சொன்னா நம்பவேணாம். காரை வெளியே எடுத்துட்டு வந்து தெரிஞ்ச மெக்கானிக் கேரேஜ்ல வண்டிய விட்டு ரிப்பேர் பண்ணுங்க. இன்ஷ்யூரன்ஸ் ம் க்ளைய்ம் பண்ணிக்கமுடியும்..
கார் தயாரிப்பு நிறுவனங்கள், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள், கார் வாங்கும் புரோக்கர்கள் பேச்ச கேட்டு ஏமாறாதீங்க..
உதயகுமாரின் ஃபேஸ்புக் பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=938249962932110&id=100002413464842