
விஜய் மல்லையா வங்கிகளுக்குக் கட்டாமல் விட்டுச் சென்ற கடன் பாக்கி ரூ. 7,000 கோடி, அவரைப் போலவே 5,275 நிறுவனங்கள் வேண்டுமென்றே கடன் தொகையைக் கட்டாமல் தவறிவருகிறார்கள் என்கின்றது கிரெடிட் இன்பர்மேசன் பீரோவின் (இந்தியா) ஒரு குறிப்பு. அதில், இந்திய வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன் பாக்கி கடந்த 13 ஆண்டுகளில் 9 மடங்கு பெருகி ரூ.56,621 கோடியில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நிறுவனங்களிடம் பணம் இருக்கும் போழுதும் வாங்கிய கடனைக் கட்டாமல் நாட்களை கடத்தி வருவார்கள் , அத்தகைய நிறுவனங்களை வங்கிகள் இந்தப் பட்டியலில் சேர்ப்பார்கள். ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட நிறுவனங்களை “defaulters” என்பார்கள்.
வேண்டுமென்றே கடனைக் கட்டாமல் தவறிய முதல் ஐந்து நிறுவனங்கள் மும்பையைச் சேர்ந்தவை.
முதல் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ரூ. 3,263 கோடி கடன் பாக்கி வைத்துள்ளனர்.

மேலே காணும் பட்டியலில், வின்சம் நகை மற்றும் வைர வியாபார நிறுவனம் மட்டும் இன்றும் இயங்கி வருகிறது . மற்ற பல நிறுவனங்களும் செயல்படாமல் கலைக்கப்படும் நிலைகளில் இருக்கிறது.
இரண்டு குழந்தைகள் விளையாடும் போது, ஒரு குழந்தை அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், தோற்கின்ற குழந்தை என்ன செய்யும் தெரியுமா…?
விளையாட்டைக் கலைத்து விடும்! அதே போல் இங்கும் கடனில் தத்தளிக்கும் நிறுவனங்களை அதன் உரிமையாளர்கள் கலைத்துவிடுகிறார்கள். கடன் கொடுத்த வங்கிகளுக்குக்…

….இல்ல, வங்கிகளைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்…!
Patrikai.com official YouTube Channel