டெல்லி:  18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி  நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வளியிட்டு உள்ளது.

10.30 AM நிலவரப்படி, பாஜக 231 இடங்களிலும், காங்கிரஸ் 100 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 33 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன்  ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.

காலை 9மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 32 இடங்களிலும் முன்னணியில் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளன.