சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகனும் விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான வீடுககள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.

Marting - Adhav Arjuna
Adhav Arjuna Martin

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில், பிரபல தொழிலதிபரான, லாட்டரி அதிபர் மார்ட்டினின் சென்னை மற்றும் கோவை வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில் அவரது மருமகனும், விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள சொகுசு பங்களா மற்றும் அவருக்கு சொந்த நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை இன்று 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது. சோதனையையொட்டி, அந்த பகுதியில், மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

சமீபத்தில், லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த கீழ் கோர்ட் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்தது; வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டு இருந்தது. இந்த சூழலில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.