டில்லி

த்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜ் பப்பர் ராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் பாலிவுட் கதாநாயகனான ராஜ் பப்பர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இம்மாநிலத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.

இதற்கு பொறுப்பேற்று உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜ் பப்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி உள்ளார். இது குறித்து காங்கிரஸ் எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.