ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – முதல் பகுதி
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் பகுதியில் முதல் 3 ராசிகளை பார்ப்போம்
மேஷம்
மேஷ ராசியின் உருவம் ஆடு ஆகும்.
எனவே ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேச ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்.
ஆட்டு மந்தையைக்கவனியுங்கள்,அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கும்.
இதன் காரணத்தினாலேயே மேச ராசிக்காரர்களைக் கலகக்காரர்கள் எனக்குறிப்பிடுகிறார்கள்.
ஆட்டுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது,
அவை நஞ்சிலும் நான்கு வாய் வைத்துத் தின்னும்.
இதனால்தான் மேச ராசிக்காரர்களைத் தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள்.
ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ எளிதில் ஏறிவிடும்,
ஆனால் இறங்கத்தெரியாது.,இதனால் மேச ராசிக்காரர்களை விவேகமில்லாதவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஆடுகளுக்கு இனப்பெருக்க காலம் எனத் தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவகாலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும்.
இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக் காணலாம்.
இதனால் மேச ராசிக்காரர்களுக்குக் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் உருவம் மாடு ஆகும். மாடுகளைக் கடினமான வேலைகளைச் செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம், அதாவது நமக்குப் பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்
.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்ப்படிந்து நடப்பர் என்றும்,
நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது.
மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்குப் பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது,
உதாரணத்திற்குச் செக்கு மாடுகளைக்கூரலாம்
இதனால் ரிசப ராசியினர் மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள்.
மாடுகளுக்கும் இனப்பெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவகாலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும்.
இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக் காணலாம்.
இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும்.
அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது போன்ற உருவ அமைப்பாகும்.
அதாவது சக மனிதர்களோடு சேர்ந்திருப்பதைப் பெரிதும் விரும்புபவர்கள் மிதுன ராசியினர்.
மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள்,
தனிமையில் அவர்களால் இருக்க முடியாது.
எப்பொழுதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதையே விரும்புவார்கள்.
இவர்கள் நல்ல தூதுவர்களாகச் செயல்படுவார்கள்.
மனிதர்களைப் பெரிதும் நேசிப்பார்கள்.
எதிர்பாலார் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.
காதல் உணர்வு அதிக மாக இருக்கும்.
அடுத்த மூன்று ராசி குறித்து நாளை பார்ப்போம்