Syrian-warplane

அங்காரா:

சிரிய நாட்டின் எல்லையில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிரிய நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்து, பயங்கரவாத செயல்களைச் செய்துவரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலைியல், சிரிய எல்லை அருகே பறந்த ஜெட் போர் விமானத்தை, தருக்கியைச் சேர்ந்த இரு எப்-16 ரக போர் விமானங்கள் வானிலேயே சுட்டு வீழ்த்தின.

துருக்கி அரசு, “ஐந்து நிமிட இடைவெளியில் 10 முறை ரஷ்ய போர் விமானம் அத்துமீறி எங்கள் எல்லையில் பறந்தது. எச்சரிக்கை விடப்பட்டும் அன்த விமானம் செல்லவில்லை. ஆகவே தாக்கினோம்” என்று அறிவித்துள்ளது.

ஆனால் ரசிய அரசு, “எங்கள் விமாம் துருக்கி எல்லைக்குள் பறக்கவில்லை” என்று கூறுகிறது. ரஷ்ய அதிபர் புடின், “சிரியா எங்கள் முதுகில் குத்திவிட்டது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

சிரிய அரசை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாத அமைப்புக்கு உதவும் விதமாகவே துருக்கி இச் செயலை செய்துள்ளது. ஆகவே அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கைகளை ரஷ்யா துவங்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.