
கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரி மலைக்கு மாலை போட்டு, இருமுடிகட்டி நடை பயணமாக சென்று அய்யப்பனை தரிசிப்பது, இந்துக்களின் வழக்கம். இதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
அதே நேரம், அய்யப்பனி்ன் புகழ் இந்தியா முழுதும் பரவி, பிரபல இந்தி நடிகர் அமிதாப் உட்பட பலர் அய்யப்பனை இருமுடி கட்டி வந்து தரிசித்ததும் உண்டு.
இப்போது அய்யனின் பெருமை உலகம் முழுதும் பரவி வருகிறது. ரஷ்ய நாட்டினரும் மாலை போட்டு, இருமுடி அணிந்து அய்யப்பனை காண வர ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த வருட சீசனில் ஆயிரம் ரஷ்யர்களுக்கு மேல் இப்படி வந்தார்கள் என்று தகவல் சொல்கிறது சபரிமலை தேவஸ்தான போர்டு.
[youtube-feed feed=1]