
நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் தேமுதிக மக்கள் நல கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய விஜயகாந்த், ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அப்போது, அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கியதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார். ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாஸால் தனக்கு மிரட்டல் வந்தபோது தான் பின்வாங்கவில்லை எனவும் விஜயகாந்த் கூறினார். எந்த ஒரு விஷயத்திலும் தான் பின்வாங்கியதில்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவும், கருணாநிதியும் மக்களை ஏமாற்ற பிறந்தவர்கள் என்றும், மக்களுக்கு நல்லது செய்யவே தான் கூட்டணி அமைத்திருப்பதாகவும் விஜயகாந்த் பேசினார்.
Patrikai.com official YouTube Channel