சென்னை

டிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

‘தல’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  ஆனால் இது குறித்த செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை.  எனவே இந்த திரைப்படம் நிறுத்தப்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியாகின.  இந்நிலையில் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஜித் குமார், “என் மீதும் என் படங்கள் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ர்சிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது.  முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும்.  அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன்.  அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.  உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிம ஒரு தொழில், நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை.  நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைத் தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  என் மே ல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.