டில்லி
இந்திய அரசு தற்போது வாங்க உள்ள ரஃபேல் போர் விமான விலை விவரங்களை தெரிவிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.
பிரான்சிலிருந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி வரும் 2019 இறுதிக்குள் 36 விமானங்கள் சப்ளை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் வாங்குவதில் முறைகேடு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விமானங்களின் விலை விவரங்கள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகளுக்கிடையே உள்ள ஒப்பந்தந்தின் 10 ஆம் விதிப்படி இந்த விமானங்களில் விலை உள்ளிட்ட பல விவரங்களை பொதுவாக தெரிவிக்கக் கூடாது என உள்ளது.
அதனால் இந்த விவரங்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்க இயலாது. அதே நேரத்தில் இந்த விமானங்கள் வாங்குவதில் எந்த முறைகேடும் நிகழவில்லை என என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என தெரிவித்துள்ளார்