கொல்கத்தா
நேற்று நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நான்காம் கட்டத்தில் 76.14% வாக்குகள் பதிவாகின.
கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்கிய மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நான்காம் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஹவுரா, ஹூக்ளி, கூச்பெகார், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். மொத்தம் 15,940 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிஉர்ந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணியில் இருந்து மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.
இந்த 4ஆம் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மேற்கு வங்க அமைச்சர்கள் பார்த்தா சட்டர்ஜி, அரூப் விஸ்வாஸ், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் லாக்கெட் சட்டர்ஜி, நிதி பிரமானிக் உள்ளிடோர் வேட்பாளர்களாக உள்ளனர். இதுவரை 135 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இந்த நான்காம் கட்ட தேர்தலில் மொத்தம் 76.14% வாக்குகள் பதிவாகி உள்ளன. வரும் 17 ஆம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவை 5ஆம் தட்டத் தேர்தல் நடைபெற உள்ளன பதிவான வாக்குகள் வரும் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன.