இலங்கை யாழ் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்கு, தாடி வைத்திருக்கக்கூடாது” என்பது உட்பட ஆடைக்கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை வட மாகானத்தில் உள்ளது புகழ் பெற்ற யாழ் பல்கலைக்கழகம். இதன் பீடாதிபதி (முதல்வர்) பேராசிரியர் நா. ஞானகுமரன், பல்கலையின் அனைத்து துறைகளுக்கும் உத்தவிட்டுள்ளதாவது.
“கல்லூரி பாட நேரத்தில் மாணவர்கள், டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் கட்டாயம் புடவை அணிந்து வர வேண்டும். மாணவர்கள் தாடி வைத்திருக்கக்கூடாது.” – இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது யாழ் பல்கலை மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஜீன்ஸ் டி சர்ட் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழரின் அடையாளமான வேட்டி சட்டை அணிய வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பெண்கள் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் புடவை கட்டி வர வேண்டும் என்கிறது.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் “தாடி வைக்காவிட்டால் தண்டனை” என்பதை நடைமுறைப்படுத்தின. இங்கே யாழ் பல்கலையில் தாடி வைக்கக்கூடாது என உத்தரவிடுகின்றனர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு” என்று மாணவர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
மொத்தத்தில் யாழ் பல்கலையின் உத்தரவு, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.