லாகூ ர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மனநிலை சரியில்லாமல் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தேசத்துரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊழல் வழக்கில் இம்ரான்கானை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஆயினும் உச்சநீதிமன்றம் தலையிட்டதை அடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டது. தற்போது இம்ரான்கான் ஜாமினில் உள்ளார். அதேவேளை தனது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டுமென இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
சுதாரத்துறை அமைச்சர் அப்துல் குவாதிர், ”முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மனநிலை சந்தேகம் எழுப்புகிறது. இம்ரான்கான் உடலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மதுப்பழக்கம், கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளது” எனக் கூறியுள்ளார்.