டெல்லி
மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி துஹின் காந்தா பாண்டே மத்திய அரசின் நிதித்துறை செயலரகா நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார்.
எனவே அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார்.
முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக கடந்த 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே, இருந்து வந்தார்.
இன்று காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel