துரை

ந்த வருட மதுரை சித்திரைத்  திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருமணம் மட்டும் நடத்தக் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வருடம் தோறும் மதுரை நகரில் சித்திரைத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும்.

கொரோனா பாதிப்பால் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வ்ரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெற வேண்டிய மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தேரோட்டம், திருவீதி உலா உள்ளிட்டவையும் ரத்து செய்யபட்டுள்ளன்.

இந்நிலையில் வரும் மே மாதம் 4 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.23க்குள் மீனாட்சி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தில் 4 சிவாசாரியார்கள் கலந்துக் கொண்டு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்த உள்ளனர்

மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாணத்தைக் கோவில் இணையதளம் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மீனாட்சி திருமணத்தின் போது மதுரை பெண்கள் கோவிலுக்கு வந்து மங்கல நாணை மாற்றுவது வழக்கமாகும்.

மே 4 அன்று பெண்கள் தங்கள் இல்லங்களிலேயே காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் புதிய மங்கல நாணை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.