டெல்லி

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது.

 

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைய உள்ளது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணிக்கு இடையிலான இருமுனைப் போட்டியாக அமைய உள்ளது. இன்று ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.