மும்பை
தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை காவல்துறையினருக்கு இனிப்பு அனுப்பி உள்ளார்.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரி மக்ள் ஷ்லோகா மேத்தாவுக்கு நாளை அதாவது மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்துக்கு பல பிரபலங்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திருமணத்தை ஒட்டி நடந்த பல நிகழ்வுகளில் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இந்நிலையில் முகேஷ் அம்பானி மும்பை மாநகர காவல் எல்லைக்குள் பணி புரியும் அனைத்து காவலர்களுக்கும் இனிப்பு அனுப்பி உள்ளார்.
இந்த இனிப்புக்கள் அடங்கிய பெட்டியில் ஒரு சிறு கார்ட் உள்ளது. அதில் முகேஷ் அம்பானி, அவர் மனைவி நீத்தா, மற்றும் அவர் குழந்தைகள் ஆகியோர் பெயர் உள்ளது, அத்துடன் அனைவரும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மும்பை காவலர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.