
விழுப்புரம் அருகே திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உருவபொம்மையை அக்கட்சி தொண்டர்களே எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஒதுக்கவேண்டிய தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி தான் காரணம் என கூறி திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொன்முடியின் உருவபொம்மையை திமுக ஆதரவாளர்கள் எரித்தனர். திமுகவை சேர்ந்த ஒருவர் தான் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Patrikai.com official YouTube Channel