urinating_jpg_1216271g
பொது இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தால், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என, மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களுக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் சட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் உள்ளதாகவும், இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் சுகாதாரத் திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இதை செயல்படுத்த வேண்டும் எனவும், 2018 ஆம் ஆண்டு இதனை 10 முதல் 15 நகரங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், ஊரக மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில்,