obama-on-facebook-original61

 

வாஷிங்டன்:

மெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்தார். இப்போது அவர் பேஸ்புக்கிலும் கணக்கு துவங்கியுள்ளார்.

தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது சொந்த பேஸ்புக் பக்கத்தை கடந்த திங்கள் கிழமை துவக்கினார்.

அவர் பேஸ்புக் பக்கம் துவங்கிய சிறிது நேரத்தில்,  2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

தனது முதல் பேஸ்புக் பதிவில், “ஹலோ பேஸ்புக்!  நம் நாடு சந்திக்கும் மோசமான பிரச்சனைகள் குறித்து நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று நம்புகிறேன். என்று எழுதியுள்ள ஒபாமா, ஒரு வீடியோவையும் பதிவேற்றி இருக்கிறார். அதில் பருவ நிலை மாற்றத்திற்றங்கள் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் தலமை செயல் அதிகாரி ஸ்ரேயால் சாந்த்பர்க் வெளியிட்டுள்ள பின்னூட்டத்தில் ,” அதிபர் ஒபாமாவே உங்களை பேஸ்புக்கிற்கு வரவேற்கிறோம். உங்களுக்கான சொந்த பக்கத்தை தொடங்கியிருப்பது உற்சாகம் அளிக்ககூடிய விஷயமாகும்” என்று கூறியுள்ளார்.