a
 
 
பிரெஸ்ஸல்ஸ்:
பெல்ஜியம் தலைநகர் பிரெஸ்ஸல்ஸில் உள்ள வென்டம் விமான நிலையத்தில் சற்று நேரத்துக்கு முன்பு இரண்டு குண்டுகள் வெடித்தன.
ஐரோப்பிய நாடுகளி்ல் ஒன்று பெல்ஜியன். இதன் தலைநகரான பிரெஸ்ஸல்ஸில் உள்ள வென்டன் விமான நிலையத்துக்கு  உலக போக்குவரத்தில் முக்கிய இடம் உண்டு. இந்தியாவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா செல்வோர், இங்குதான் விமானம் மாற வேண்டும். எப்போதும் விமானங்கள் தரையிரங்கியபடியும் கிளம்பியபடியும் பரபரப்பாக இருக்கும்.
c
 
இந்த விமான நிலையத்தில் சில மணி நேரத்துக்கு முன்பு இரண்டு குண்டுகள் வெடித்தன. அமெரிக்க ஏர்லைன்ஸின் டிக்கெட் பரிசோதனை மையத்தின் அருகில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
b
 
குண்டு வெடித்தவுடன் விமான நிலையம் முழுதும் புகைமூட்டம் சூழ்ந்தது. பயணிகள் அலறி அடித்தபடி, அங்குமிங்கும் ஓடினர். விமான நிலையம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
சம்பவம் நடந்த சில நிமிடங்களில் விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்தார்கள்.
இதற்கிடையே குண்டு வெடித்ததில் பலர் காயம் அடைந்தார்கள்  என்று தகவல்கள் கூறுகின்றன. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இதுவரை இல்லை.
 
d
உடனடியாக,. விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் வளையத்திற்குள் வந்தது.  விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது என்று பெல்ஜியம் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.
இதற்கிடையே மேலும் வெடிகுண்டுகள் உள்ளனவா என்று அறிய  விமான நிலையம் முழுவதும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.