கலிபோர்னியா:
முந்தைய காலத்தில் பூமியோடு மற்றொரு கிரகம் இணைந்திருந்தது என்பதை விஞ்ஞாணிகள் உறுதி செய்துள்ளனர்.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தியா என்ற ஒரு கிரகம் பூமியோடு மோதியுள்ளது. பூமியில் உள்ள புவி ஈர்ப்பு சக்தி காரணமாக அந்த கிரகம், பூமி பந்தோடு ஓட்டிக் கொண்டு விட்டது. இது பார்ப்பதற்கு பூமியின் தலை போல் இருந்துள்ளது. இதன் மூலம் பூமி இரு கிரகங்கள் மூலம் உருவாகியிருக்கலாம் என்பதை விஞ்ஞாணிகள் கண்டு பிடித்துள்ளனர். இதுவே நாளடைவில் நிலாவாக மாறியுள்ளது.
ஆரம்ப காலத்தில் தியா என்ற கிரகம் பூமியை சுற்றி திரிந்து கொண்டிருந்தபோது, அது உடைந்துள்ளது. அதன் ஒரு சிறிய துண்டு தான் வின்வெளியில் பூமியின் ஈர்ப்பு சக்தி மூலம் நிலாவாக உருவாகியதாக நம்பப்பட்டது. பூமியில் உள்ள ரசாயன தொகுப்புக்கும் நிலவில் உள்ள ரசாயன தொகுப்புக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கிறது.
நிலவை ஆராய்ச்சி செய்த கலிபோர்னியா பல்கலைக்கழக அப்பலோ மிஷன்ஸ் விஞ்ஞாணிகள், பூமியை உள்ள ஆக்ஸிஜன் ஐஸோடோப்கள் போலவே நிலாவிலும் இருப்பதை கண்டறிந்தனர்.
தியா கிரகம் பூமியோடு மோதி, புதிய கிரகத்தை உருவாக்கும் இந்த சம்பவம் பெரும் வன்முறையாக இருந்திருக்கும். மோதலின் போது உருவான சிறிய துண்டு தான நிலாவாக மாறிவிட்டது என்பதை விஞ்ஞாணிகள் உறுதிபட கூறினர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எட்வர்டு யங் கூறுகையில்,‘‘பூமி மற்றும நிலாவில் உள்ள ஆக்ஸிஜன் ஐஸோடோப்ஸ்களில் எவ்வித வேறுபாடும் இல்லை. பூமி மற்றும் நிலவின் கலவை தான் தியா. இந்த இரு கிரகங்களுக்கு இடையேயான மோதல் பூமி உருவாகி 100 மில்லியன் ஆண்டுகளுக்க பின் நடந்திருக்க கூடும். அதாவது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்திருக்கும். 45 டிகிரி வடிவத்தில் தியா பூமியோடு மோதியிருக்க வேண்டும். இந்த மோதல் சம்பவம் நடந்திருக்கவில்லை என்றால் தியா ஒரு தனி பெரும் கிரகமாக வளர்ந்திருக்கும்’’ என்றார்.