12642465_10153468114277149_7606433327520732360_n
பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் இருந்து, “மகமனாயா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரெயில் சேவையை கடந்த 22ம் தேததி துவக்கி வைத்தார்.  டில்லிக்கு சென்று வரும் ரயில் இது. பல்வேறு சொகுசு வசதிகள் நிறைந்தது என்று அறிவிக்கப்பட்டது.

பத்து நாட்களுக்கு முன் ரயில் சேவை துவக்கப்பட்டபோது..
பத்து நாட்களுக்கு முன் ரயில் சேவை துவக்கப்பட்டபோது..

புத்தம் புதிய இந்த ரயிலின் நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்.
புதிய வசதிகளை அரசு செய்தால் மட்டும் போதாது…  மக்களும் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் ! அதைவிட முக்கியம், இது போல் நடக்காமல் ரயில்வேதுறை கண்காணிக்க வேண்டும். மேலும்,  உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும்.
புதிய ரயில்சேவைகளை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது!
இன்னொரு விசயம்…  கடந்த வருடம் பாஜக ஆட்சிக்கு வந்த புதிதில் ஏதோ ஒரு ரயில் சரியான நேரத்துக்கு வந்துவிட்டது. உடனே, “மோடி தான் இதற்குக் காரணம்.  அவரது சிறந்த நிர்வாகத்தால்தான்  ரயில்கள் சரியான நேரத்துக்கு வருகின்றன” என்று பா.ஜ.க. ஆதரவாளர் மோடியை புகழ்ந்து தீர்த்தார்கள். (அதன் பிறகு அந்த ரயில் உட்பட எந்த ரயிலும் சரியான நேரத்துக்கு வருவதில்லை!)
சரியான நேரத்துக்கு ரயில் வந்ததற்கு மோடிதான் காரணம் என்றால், அவரே துவங்கி வைத்த.. அவரது தொகுதியில் இருந்து செல்லும் ரயில் பராமரிக்கப்படாமல் கிடப்பதற்கும் மோடிதானே காரணம்?
எப்படியோ.. இனியாவது அந்த ரயிலை ஒழுங்காக பராமரித்தால் சரி!
Rajendra B. Aklekar