புத்தக விமர்சனம்: ஐந்து முதலைகளின் கதை
“Malcolm Gladwell” எழுதிய “Tipping Point” மாதிரியோ அல்லது “Eliyahu M. Goldratt” எழுதிய “The Goal” மாதிரியோ தமிழில் உன்மை கதைகளுடன் புனையப்பட்ட ஒரு business management புத்தகம் வந்த்திருக்கிறதா என்பது எனக்கு தெரியாது அப்படி வரவில்லை என்றால் நன்பர் சரவணன் எழுதியுள்ள இந்த ஐந்து முதலைகளின் கதை அந்த ஆங்கில நாவல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறது.
வெற்றி பெற்றவர்களிடம் இருந்து கற்றுகொள்வதைவிட தோல்வியை பகிரங்கமாக ஒத்துக்கொள்பவரிடம் கற்றுகொள்ள ஏராளமான கதைகள் இருக்கும். அவைகள் வெரும் கதைகள் அல்ல வெற்றிக்கான வழிகாட்டி. கதையின் ஆசிரியர் தான் கடந்த்துவந்த ஒரு முள் பாதையை வாசகர்களுக்கு காட்டுவது அவர்கள் அந்த முள் அவர்களை குத்திவிடாமல் நடக்க காட்டப்படும் வெளிச்சம்.
பொதுவாக கதைகளில் யாராவது ஒருவர்தான் தத்வார்தமாக பேசுவார்கள் அந்த மாதிரியான தத்துவங்கள் கதையை முன் நகர்த்திசெல்லும். ஆனால் ஐந்து முதலைகளின் கதையில் கிட்டத்தட்ட அனைத்து கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு சூழலில் வாழ்கையில் அல்லது தொழிலில் பயன்படும் வகையில் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் போகிறபோக்கில்நெஞ்சில் முள் தைப்பதுபோல் குத்திவிட்டு செல்கின்றன.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் நம் முன்னோர்கள் அப்படி போகும் இடத்தில் என்னவெல்லாம் நடக்கும் நாம் நம்மை எவ்வாறு தயார்படுத்தி கொள்ள வேண்டும். தடைகளை எப்படி தாண்டவேண்டும், காத்திருக்கும் புதைகுழிக்குள் விழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள இது கதை அல்ல பாடம்.
கதைக்குள் காதலுக்கும் காமத்துக்கும் பஞ்சம் இல்லை ஆனால் அது தொழில் தொடங்க சென்ற இடத்தில் எவ்வாறான எதிர்பாரா எதிரிகளை உருவாக்குகிறது என்பதையும் ஆசிரியர் சொல்ல தவறவில்லை. காதலும் காமமும் இலக்கை நோக்கி செல்லும் பயணத்தில் மறைமுகமாகவும் பின் நேரடியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பல அத்தியாயங்களில் சுட்டிகாட்டி இருப்பது வெளி நாடு சென்று தொழில் முனைய விரும்பும் இளம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணியாகவே அடிக்கிறார்.
சாலைவழி பயணத்தின் போதுதான் இந்த நாவலை படித்துக்கொண்டுவந்தேன். நாவல் பல சோகங்களையும் தோல்விகளையும் அதனால் ஏற்பட்டவலிகளையும் சொல்லிக்கொண்டே வரும்போது தைமூரில் நடந்த தேர்தலின் போது பதவியில் இருக்கும் மந்திரியால் அந்த நாட்டு மக்களுக்கு தன்னை முதலீட்டாளராக அறிமுகம் செய்துவைத்ததை நினைவு கூறும் இடத்தில் நான் வெடித்து சிரித்துவிட்டேன் கதையில் அந்த இடம் வரும் சூழலையும் மறந்து, இந்த நாவல் இங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பே அச்சில் இருந்து வெளிவந்துவிட்டாலும் என்னால் ஆசிரியரின் நிலமையை நிகழ்காலத்தில் நடந்த கூத்தோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
உணவு, பயணம், வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் அவஸ்தைகள், செம்மர கட்டைகள் முதல் நட்சத்திர மீன் வரை, கடல் அட்டை முதல் மணல் மபியா வரை நிகழ் உலகத்திர்க்கும் நிழல் உலகத்திற்க்கும் கதை மாறிமாறி பயணித்தாலும் அந்த இடங்களில் எல்லாம் அந்த தொழில் சார்ந்த சாதக பாதகங்களை நமக்குள் வலிக்காமல் ஏற்றிக்கொண்டே செல்கிறார்.
Senthil Murugan https://www.facebook.com/senthil.murugan.184007?fref=photo