download
சமீபத்தில் நடிகர் சிம்பு பாடிய ஆபாசமான “பீப்” பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல தரப்பினரும் சிம்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அவர் மீதும், அப் பாடலுக்கு இசை அமைத்ததாகச் சொல்லப்பட்ட அனிருத் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. காவல்துறையிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே சிம்புக்கு அவரது தாய் உஷாவும், தந்தை டி.ராஜேந்தரும் ஆதரவு அளித்தனர். அந்த நிலையில் இவர்களைத் தவிர, சிம்புவுக்கு ஆதரவு அளித்தவர் “தமிழர் முன்னேற்றப்படை” என்ற அமைப்பை நடத்தி வருவதாகச் சொல்லும் வீரலட்சுமி என்பவர் மட்டுமே.
அப்போது அவர், “நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை தவறாகபேசினார்.ஆனால் ஆந்திரத்தில் பிறந்த அவரைப்போன்ற தெலுங்கர்கள், எந்த தவறு செய்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் பச்சைத்தமிழரான சிம்புவை மட்டும் குறை சொல்கிறார்கள். ஆகவே சிம்புவை ஆதரிக்கிறோம்” என்று தனது முகநூல் பக்கத்தில் எழுதி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.
சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரை நேரில் சந்தித்தும் பீப் பாடலுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, “தமிழகத்தை தமிழர்தான் ஆளவேண்டும். தெலுங்கர்களான வடுக வந்தேரிகள் ஆளக்கூடாது” என்றும் தனது முகநூல் பக்கத்தில் எழுதிவந்தார்.
இப்படி முகநூலில் “தமிழ் தேசிய” (!) அரசியல் நடத்திவந்த வீரலட்சுமி, இன்று விஜயகாந்தை சந்தித்து கேப்டன் நலக் கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மக்கள்நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோவும் இருந்தார். இவருவரும் வீரலட்சுமியை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்