
காத்மாண்டு:
கடந்த 1–ந்தேதி முதல் பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார் அறிவித்தார். பீகார் மாநிலத்தின் பெரும் பகுதி நேபாள எல்லையில் உள்ளது. தற்போது அங்கு திடீரென மது விலக்கு அமல்படுத்தப் பட்டதால் மதுவுக்கு அடிமையான குடிமகன்கள் நேபாள எல்லைக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
எனவே, அங்கு கள்ளச் சாராய விற்பனை படு ஜோராக அமோகமாக நடைபெற்று வருகிறது. சிறிய சாராய வியாபாரிகள் எல்லையில் குடிசைகளை அமைத்து கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அங்கு குைற்நத அளவில் இருந்த கள்ளச் சாராய கடைகள் தற்போது ஆளமாக பெருகிவிட்டன. அதனால் 2 முதல் 3 மடங்கு விற்பனை அதிகரித்ததுடன் விலை மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களின் போது பீகாரில் இருந்து ஏராளமான இளைஞர்கள், வியாபாரிகள், அதிக அளவில் படையெடுக்கின்றனர். மேலும் நேபாள எல்லையில் இருந்து பீகாருக்குள்ளும் கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது. அதை தடுக்கும்படி நேபாள எல்லையோர மாவட்ட அதிகாரிகளிடம் பீகார் மாநில அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்
Patrikai.com official YouTube Channel