வயநாடு
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் ரோடு ஷோ நடத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், எனவே வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்தது. அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
நேற்று பிரியங்கா காந்தி வயநாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வந்து அங்கு பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். \ நீலகிரியில் பிரியங்கா காந்தி கல்லூரி மாணவர்களை சந்தித்தார். பிறகு அவர் நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி சென்று அங்கு ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.