
பாரீஸ்:
பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் மேற்காசிய நாடுகளில் இருந்து பிரான்ஸில் அகதிகளாக குடியேறியுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரான்ஸ் – இங்கிலாந்து எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு இனவாதிகள் இத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிரான்சின் இனவாதக் கட்சியான தேசிய முன்னணி அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]