டெல்லி: விஜய் மல்லையாவின் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் மீதான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மல்லையா மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.
இதனிடையே தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந் நிலையில் தற்போது விஜய் மல்லையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
அதன்படி பிரான்சில் உள்ள மல்லையாவின் 14.34 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடன் ஏய்ப்பு விவகாரத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.