மெல்போர்ன்:
பிணத்தை கொலை செய்ய முயன்றதாக மெல்போர்னை சேர்ந்தவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா மெல்போர்னை சேர்ந்தவர்கள் டேனியல் ஜேம்ஸ் டேரிங்க்டன், (39), மற்றும் ராக்கி மேட்ஸ்கேஸி, (31). கடந்த 2014 ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் மேட்ஸ்ககேஸி, குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதன் பின்னர் துப்பாக்கி டேனியல் கைக்கு வந்தவுடன் அவர் மீண்டும் தரையில் சாய்ந்து கிடந்ந மேட்ஸ்கேஸி உடல் மீது சுட்டார்.
இது தொடர்பான வழக்கில் விசாரணையில், முதல் குண்டு பாய்ந்ததிலேயே மேட்ஸ்கேஸி இறந்துவிட்டார் என்ற மருத்துவ அறிக்கையுடன் கூடிய வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
ஆனால் இந்த வழக்கு அந்நாட்டு விக்டோரியா உச்சநீதிமன்ற விசாரணைக்கு சென்றது. அப்போது முதல் குண்டு பாய்ந்ததில் அவர் இறந்திருந்தாலும், அவரை கொலை செய்யும் நோக்கத்தில் டேனியல் இரண்டாவது முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதனால் அவருக்கு குறைந்தபட்சம் தண்டனை வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் சம்பவம் நடப்பதற்கு முன் இருவரும் அவர்களது நண்பர் மெல்டன் என்பவரது வீட்டில் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்ற வாதத்தை நீதிபதி பால் கோக்லன் ஏற்றுக் கொண்டனர்.
துப்பாக்கியை முதலில் கொண்டு வந்தது மேட்ஸ்கேஸி தான், என்பதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து டேனியல் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிணத்தை சுட்டு கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக அவருக்கு இன்று தண்டனை விதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.