facebook
பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் 75 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்து, தீவிரமாக இயங்கி வருவதாக  ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.   13 வயதிற்கு குறைந்தவர்கள்  சமூகவலைதளங்களில் கணக்குகளை வைத்திருக்கக் கூடாது என்ற சட்டத்தை மீறி இது நடக்கிறது.
பிரபலமான பி.பி.சி. தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து சிறுவர்களுக்காக சிபிபிசி என்ற சேனல் ஒளிபரப்பாகிறது. இந்த சேனல், சமீபத்தில், சமூகவலைதளங்களில் சிறுவர்கள் இயங்குவது பற்றி ஒரு ஆய்வு நடத்தியது.
பதின்மூன்று வயதிற்கு குறைவான சிறுவர்கள் சமூகவலைதங்களை பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அப்படி சிறுவர் யாராவது தமது தளத்தை பயன்படுத்தினால் தகவல் தெரிவிக்குமாறு  இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் பிரிட்டனில் 75 சதவிகித சிறுவர்கள் ( 10 முதல் 12 வயதுள்ளோர்) சமூகவலைதளங்களை பயன்படுத்துகிறார்கள் என்று சிபிபிசி ஆய்வு தெரிவிக்கிறது.
இது பெற்றோர்களை கவலை கொள்ள வைத்திருக்கிறது. “சமூகவலைதளங்களை பார்ப்பது அறிவை பெருக்கும் விஷயம்தான். ஆனால் அதில் பலதரப்பட்ட விஷயங்கள் வருகின்றன. ஆகவே பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று பிரிட்டன் பெற்றோர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.