bigini-vinayagar

 

கலிபோர்னியா:

இந்து மக்கள் கொண்டாடும் தெய்வங்களில் ஒருவரான விநாயகரை போற்ரும் விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்,  ஒன்று பெண்கள் அணியும் பிகினிமற்றும் வாட்டர் போலோ உடைகளில்  விநாயகர் படத்தை  அச்சிட்டு விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது,  இதற்கு இந்து  அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில், உடை, வாட்ச், செருப்பு ஆகியவற்றில் உருவங்களை அச்சிட்டு விற்பனைக்கு கொண்டுவருவது வழக்கம்.  வித்தியாசமாக இருக்கிறது என்கிற எண்ணத்தில், இந்து கடவுள்களான லட்சுமி, காளி, விநாயகர் உருவங்களை உடை மற்றும் செருப்புகளில் அச்சிட்டு விற்பனைக்குக் கொண்டுவருவதும், அதற்கு இந்து மக்கள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், அப் பொருட்களை வாபஸ் பெருவதும் அவ்வப்போது நடந்துவருகிறது.

இந்த  நிலையில், அமெரிக்க ஆடை நிறுவனம் ஒன்று, பெண்களின் நீச்சல் உடையில்விநாயகர் உருவம் பொறித்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

“இந்த நீச்சல் உடை விற்பனையை அந்த நிறுவனம் உடனே நிறுத்த வேண்டும்” என்று பல்வேறுஇந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரபஞ்ச இந்து சமுதாய அமைப்பின தலைவர்ராஜன் ஜெட் , “வாட்டர் போலோ மற்றும் நீச்சல் உடைகளில் கணேச பெருமானின் உருவம்பொறித்திருப்பது வேதனை அளிக்கிறது. வணக்கத்திற்குரிய இந்து கடவுளின் உருவத்தைபெண்களின் உடைகளில் பொறித்து விற்பதற்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். உடனடியாக இந்த ஆடைகளை வாபஸ் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்கர்களைப் பொறுத்தவரை எதையும் “ஜஸ்ட் லைக் தட்” என்று எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். மத வேறுபாடுகளைக் கடந்து மதிக்கக்கூடிய தேசிய கொடியையும் பிகினி உடையில் பதித்து அணிகிறார்கள்.

bigini-vinayagar1

 

ஆனாலும், “மத ரீதியாக மனதைப் புண்படுத்தும் வகையில் கடவுள் உருவத்தை பிகினி உடையில் பொறிப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.